”தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்” - மாத இதழாக 1986ஆம் ஆண்டு “கண்ணோட்டம்” என்ற பெயரில், உருட்டச்சு இதழாகத் தொடங்கப்பட்டு இன்றோடு 35 ஆண்டுகளை கடந்து இடைவிடாமல் வெளி வந்து கொண்டுள்ளது.
தமிழ் மொழி, இனம், பண்பாடு, அரசியல், கலைகள், தொழில், வேலைவாய்ப்பு, வேளாண்மை, இலக்கியம், ஆன்மிகம், அறிவியல், தொல்லியல் என பல்வேறு கூறுகளின் கீழ், அவற்றை பாதுகாக்கவும், இழந்த உரிமைகளை மீட்கவுமான தர்க்கங்களையும், சான்றுகளையும் ஆவணப்படுத்தும் வகையில் படைப்புகளை தொடர்ந்து இவ்விதழில் வெளியிட்டு வருகிறோம்.
இன்றைக்கு தமிழ்த்தேசியம் என்பது தவிர்க்க முடியாத அரசியல் சொல்லாக நிலைநிறுத்தியதில், தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழுக்குப் பெரும் பங்கு உண்டு!
இவ்விதழை அச்சுப் பிரதிகளைத் தாண்டி, இணைய வழியல் வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் இணைய இதழைத் தொடங்கியுள்ளோம். கண்ணோட்டம் வெளிவந்த முதல் பிரதியிலிருந்து அண்மைக் காலப்பிரதி வரை இதில் பதிவேற்றம் செய்திருக்கிறோம்.